கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

பிறப்பு ஜூலை 27, 1876
தேரூர், கன்னியாகுமரி மாவட்டம்
இறப்பு செப்டம்பர் 26, 1954 (அகவை 78)
அறியப்படுவது கவிஞர்
பட்டம் கவிமணி
பெற்றோர் சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
வாழ்க்கைத் துணை உமையம்மை


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு
சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிள்ளை  பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் குழந்தைக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.

ஆசிரியர் பணி
நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

மொழிபெயர்ப்பாளர்
எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.

ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.

விருதுகள்
24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 ல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

கவிமணியின் நூல்கள்
அழகம்மை ஆசிரிய விருத்தம்
ஆசிய ஜோதி , (1941)
மலரும் மாலையும், (1938)
மருமக்கள்வழி மான்மியம், (1942)
கதர் பிறந்த கதை, (1947)
உமார் கய்யாம் பாடல்கள், (1945)
தேவியின் கீர்த்தனங்கள்
குழந்தைச்செல்வம்
கவிமணியின் உரைமணிகள்

இந்திய அரசியல்

1. இந்தியாவில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) ஜவகர்லால் நேரு
ஆ) இந்திராகாந்தி
இ) இராஜீவ்காந்தி
ஈ) லால் பகதூர் சாஸ்திரி

விடை அ) ஜவகர்லால் நேரு

2. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அதன் நடுவர் ........
அ) ராஜினாமா செய்யவேண்டும்
ஆ) நீக்கப்படுவார்
இ) 30 நாட்கள் வரை அப்பதவியில் நீடிப்பார்
ஈ) அடுத்த நாடாளுமன்றம் கூடும் வரை நீடிப்பார்

விடை ஈ) அடுத்த நாடாளுமன்றம் கூடும் வரை நீடிப்பார்

பிற பொது அறிவு துணுக்குகள்

1.  இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா
2.  ஐந்து கண்கள் உள்ள பறக்கும் உயிரினம் தேனீ
3.  போருக்கு செல்லும் இடங்களுக்கெல்லாம் தன் மனைவியை                             அழைத்துச்சென்றவர் ஷாஜஹான்
4. சங்ககால சோழர்களின் முதலாவது தலைநகர் உறையூர்
5. உலகிலேயே அதிக நூல்களை எழுதியவர் அலெக்சாண்டர் டூமாஸ்
    (1200 நூல்கள்)
6. டைனமைட் என்ற வெடிமருந்தை டாக்டர் ஆல்பிரட் நோபல் என்ற                  ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்தார்.
7. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் மற்றும்       பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு         வழங்கப்படுகிறது.
8. சொந்த ராக்கெட் மூலம் செயற்கைகோளை செலுத்திய ஆசிய நாடுகள்       இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் ஆகும்.
8.  நமது உடலில் உதடுகளில் வியர்ப்பது இல்லை.
9.  உலக வளைதளத்தை (www) உருவாக்கியவர் டிபெர்னர்ஸ்.
10. வெள்ளை நிற தோல் உடையவர்களின் சருமத்தில் காணப்படாத                   நிறமி மெலனின் ஆகும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு
              தமிழ்நாடு (Tamil Nadu) இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது.புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில்இந்தியப் பெருங்கடலும் உள்ளன.
தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள்தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்தியமொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாக (2010இல்) உள்ளது. 2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10.56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9.97%) விளங்குகிறது.
கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள்வாழ்ந்து வந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன. தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால்அகத்தியருக்கு கற்பிக்கப்பட்டதாக நம்பப் படுகின்றது. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
                                                                     ---------
தமிழக மாநகராட்சிகள் 
                   இந்திய மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1. சென்னை மாநகராட்சி 1688
        2. மதுரை மாநகராட்சி 1971
        3. கோவை மாநகராட்சி   1981
        4. திருச்சி மாநகராட்சி     1994
        5. சேலம் மாநகராட்சி 1994
        6. நெல்லை மாநகராட்சி   1994
        7. திருப்பூர் மாநகராட்சி 2008
        8. ஈரோடு மாநகராட்சி 2008
        9. வேலூர் மாநகராட்சி 2008
       10. தூத்துக்குடி மாநகராட்சி 2008
       11. திண்டுக்கல் மாநகராட்சி 2014
       12. தஞ்சாவூர் மாநகராட்சி 2014

           -----------------------------------------------

மாவட்டங்கள்
              தமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
  1. அரியலூர் மாவட்டம்
  2. இராமநாதபுரம் மாவட்டம்
  3. ஈரோடு மாவட்டம்
  4. கடலூர் மாவட்டம்
  5. கரூர் மாவட்டம்
  6. கன்னியாகுமரி மாவட்டம்
  7. காஞ்சிபுரம் மாவட்டம்
  8. கிருஷ்ணகிரி மாவட்டம்
  9. கோயம்புத்தூர் மாவட்டம்
  10. சிவகங்கை மாவட்டம்
  11. சென்னை மாவட்டம்
  12. சேலம் மாவட்டம்
  13. தஞ்சாவூர் மாவட்டம்
  14. தர்மபுரி மாவட்டம்
  15. திண்டுக்கல் மாவட்டம்
  16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
  1. திருநெல்வேலி மாவட்டம்
  2. திருப்பூர் மாவட்டம்
  3. திருவண்ணாமலை மாவட்டம்
  4. திருவள்ளூர் மாவட்டம்
  5. திருவாரூர் மாவட்டம்
  6. தூத்துக்குடி மாவட்டம்
  7. தேனி மாவட்டம்
  8. நாகப்பட்டினம் மாவட்டம்
  9. நாமக்கல் மாவட்டம்
  10. நீலகிரி மாவட்டம்
  11. புதுக்கோட்டை மாவட்டம்
  12. பெரம்பலூர் மாவட்டம்
  13. மதுரை மாவட்டம்
  14. விருதுநகர் மாவட்டம்
  15. விழுப்புரம் மாவட்டம்
  16. வேலூர் மாவட்டம்

------------------------------------

இந்தியா

இந்தியா

                                          ------

1. இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
               டாக்டர் இராஜேந்திர பிரசாத்
2. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
               பண்டித ஜவஹர்லால் நேரு
3. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
              இந்திராகாந்தி
4. இந்தியாவின் முதல் பெண் முதல்வா் யார்?
              சுசிதா கிரிபாலனி
5. இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்?
              ஜெகஜீவன் ராம்
6. இந்தியாவின் முதல் விண்கலம் எது?
             ஆரியபட்டா
7. இந்தியாவின் முதல் ராக்கெட் எது?
             ரோஹினி
8. இந்தியாவில் முதல் ஆஸ்கார் விருது பெற்றவர் யார்?
             பானு ஆதித்யன் 

                                         ------

இந்தியாவின் நிலை
 
உலக நாடுகளில் சில துறைகளில் நமது நாடு வகிக்கும் இடத்தை அறிவோம்

 
1. மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவிற்கு 
முதல் இடம்
2. மக்கள் தொகையில் இரண்டாம் இடம்
3அறிவியல் தொழில்நுட்பத்தில் மூன்றாம் இடம்
4. படைகளின் எண்ணிக்கையில் நான்காம் இடம்
5. விண்வெளி ஆராய்ச்சியில் ஐந்தாம் இடம்
6.அணுசக்தி ஆராய்ச்சியில் ஆறாம் இடம்
7. நிலப்பரப்பின் அடிப்படையில் ஏழாம் இடம்


                                           ***** 
இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?
ஊலர் ஏரி, ஜம்மு-காஷ்மீர் (16 கி்மீ. நீளம்- 9 கி்மீ அகலம்)

 
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைப் படகின் பெயர் என்ன?
விபுதி

இந்தியாவின் மிகப்பெரிய சிலை எது? எங்குள்ளது?
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
 

                                               
                                          ***** 
தேசிய இயற்பியல் சோதனைச்சாலை        - புதுடெல்லி 
தேசிய வேதியியல் சோதனைச்சாலை        - புனே    
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம்        - காரைக்குடி
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம்        - சென்னை
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையம்        - ரூர்க்கி
மத்திய மருந்து சரக்கு ஆராய்ச்சி நிலையம்        - லட்சுமணபுரி
மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்        - மைசூர்
சாலை ஆராய்ச்சி நிலையம்        - டெல்லி
உலோகத் தொழில் சோதனைச்சாலை        - ஜாம்ஷெட்பூர்
எரிபொருள் ஆராய்ச்சி நிலையம்        - ஜியால்கோரா 

                                             ****
எல்லைகள்

வடக்கு ... இமயமலை
தெற்கு ... இந்தியப்பெருங்கடல்
கிழக்கு ... வங்காள விரிகுடா
மேற்கு ... அரபிக்கடல்


மொத்தப்பரப்பு ... 3287590 சதுர கிலோமீட்டர்
தலைநகரம் ... புதுடெல்லி
மாநிலங்கள் ... 29 
  1. தமிழ் நாடு
  2. அருணாச்சல் பிரதேசம்
  3. அஸ்ஸாம்
  4. பிஹார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  8. ஹரியானா
  9. இமாசலப் பிரதேசம்
  10. ஜம்மு காஷ்மீர்
  11. ஜார்க்கண்ட்
  12. கர்நாடகம்
  13. கேரளம்
  14. மத்தியப் பிரதேசம்
  15. மகாராஷ்டிரம்
  16. மணிப்பூர்
  17. மேகாலயா
  18. மிசோரம்
  19. நாகாலாந்து
  20. ஒரிஸா
  21. பஞ்சாப்
  22. ராஜஸ்தான்
  23. சிக்கிம்
  24. ஆந்திரப் பிரதேசம்
  25. திரிபுரா
  26. உத்தரகண்ட்
  27. உத்தரப் பிரதேசம்
  28. மேற்கு வங்காளம்
  29. தெலுங்கானா

மத்திய ஆட்சிப்பகுதி ... 7
(யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்)
  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  2. சண்டிகர்
  3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
  4. தாமன், தியு
  5. லட்சத்தீவுகள்
  6. புதுச்சேரி
  7. தில்லி


மொத்த மக்கள் தொகை ... 1210193422 (2011)
ஆண்கள் ... 623724248
பெண்கள் ... 586469174

எழுத்தறிவு ... 74.04 சதவிகிதம்
ஆண்கள் ... 82.11 சதவிகிதம்
பெண்கள் ... 65.46 சதவிகிதம்
சுதந்திர தினம் ... 1947 ஆகஸ்ட் 15
குடியரசு தினம் ... 1950 ஜனவரி 26
நாட்டின் தலைவர் ... குடியரசுத்தலைவர்
அரசுத்தலைவர் ... பிரதமர்
லோக்சபா உறுப்பினர்கள் ... 545 (543 + 2 நியமன உறுப்பினர்கள்)
இராஜ்யசபா உறுப்பினர்கள் ... 245 (233 + 12 நியமன உறுப்பினர்கள்)
தேசிய கீதம் ... ஜனகணமன
தேசியப்பாடல் ... வந்தே மாதரம்
தேசியச்சின்னம் ... அசோகச்சக்கரம்
தேசியக்கொடி ... மூவர்ணக்கொடி
தேசிய மொழி ... இந்தி
தேசிய பறவை ... மயில்
தேசிய விலங்கு ... புலி
தேசிய நீர் வாழ்விலங்கு ... டால்பின்
தேசிய மலர் ... தாமரை
தேசிய மரம் ... ஆலமரம்
தேசியக்கனி ... மாம்பழம்
தேசிய நதி ... கங்கை
தேசிய விளையாட்டு .... ஹாக்கி
தேசியக்காலண்டர் ... சக வருடம்
தேசிய நாணயம் .... ரூபாய்
தேசிய மொழிகள் மொத்தம் ... 22

1.தமிழ்              2.அசாமி                 3.வங்காளி             4.குஜராத்தி       5.இந்தி 6.கன்னடம்       7.காஷ்மீரி              8.மலையாளம்      9.மராத்தி         10.ஒரியா 11.பஞ்சாபி      12.சமஸ்கிருதம்   13.சிந்தி                   14.உருது           
15.தெலுங்கு    16.கொங்கணி        17.நேபாளி              18.மணிப்புரி    19.போடோ 20.மைதிலி      21.கந்தசாலி           22.டோக்ரி

இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர். இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார். பெற்றோர்இராமையா - சின்னம்மையார்


ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. 


சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. இவர் அனைத்து மத நல்லிணக்கத்திற்காக  சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர். 


வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. இவர் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.


                                                                          

வழிகாட்டும் வள்ளலார்!
ராமையா&சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக  ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.

ராமலிங்கம் பிறந்த ஆறாவது மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தார்.
புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.

அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.

பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார்.


                                             -----------------------
                                                   
1. ''கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்'' எனக்கூறியவர் யார்?
விடை : இராமலிங்க அடிகளார்
2. இராமலிங்க அடிகளார் அவர்களின் சிறப்புப்பெயர் என்ன?
விடை : திருவருட்பிரகாச வள்ளலார்
3. இராமலிங்க அடிகளார் அவர்களின் பெற்றோர் யாவர்?
விடை : இராமையா - சின்னம்மையார்
4. இராமலிங்க அடிகளார் அவர்கள் பிறந்த ஊர் எது?
விடை : கடலூர் மாவட்டத்திலுள்ள மருதூர்
5. இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் யாவை?
விடை : ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
6. இராமலிங்க அடிகளார் இயற்றிய பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன?
விடை : திருவருட்பா
7. ''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'' இது யார் கூற்று?
விடை : இராமலிங்க அடிகளார்
8. பசித்துயர்போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலை அமைத்தவர் யார்?
விடை : இராமலிங்க அடிகளார்
9. மக்களுக்கு அறிவுநெறி விளங்க இராமலிங்க அடிகளார் எதனை நிறுவினார்?
விடை : ஞானசபை
10. இராமலிங்க அடிகளார் அவர்கள் வாழ்ந்த காலம் எது?
விடை : 05-10-1823 முதல் 30-01-1874 வரை

பிரித்து எழுதுக

1. அன்பகத்து இல்லா    = அன்பு + அகத்து + இல்லா
2. வன்பாற்கன்    = வன்பால் + கண்
3. தளிர்த்தற்று    = தளிர்த்து + அற்று
4. தமக்குரியர்        = தமக்கு + உரியர்      
5. அன்பீனும்        = அன்பு + ஈனும்
6. நிழலருமை        = நிழல் + அருமை
7. நன்கணியர்    = நன்கு + அணியர்